சாலை சீரமைப்பு: போலீசாருக்கு மக்கள் பாராட்டு

சென்னை

செங்குன்றம், நவ.14: மாதவரம் துறைமுகம் மற்றும் பொன்னேரி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் சம்பவம் அடிக்கடி நடந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் மாதவரம் சரக போக்குவரத்து உதவி ஆணையர் பிரபாகரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் எழிலன், விஸ்வநாதன், மற்றும் காவலர்கள் காமராஜ், ஜீவா, சங்கர், ஜெயகுமார், பிரதாபன், சசி ஆகியோர் சிமெண்ட் கான்கிரீட் கலவை மூலம் சாலையில் ஏற்பட்டிருந்த குண்டும், குழியான பகுதிகளை சீரமைத்தனர்.
போக்குவரத்து போலீசார் இந்த செயலை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.