சிதம்பரம், நவ.14: சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவன் தருண் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியில் தகுதி பெற்று தமிழக அணியில் இடம் பிடித்து மத்திய பிரதேச மாநிலம் சட்ராபுரில் நடைபெற உள்ள பேஸ்பால் போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவன் தருணை பள்ளியின் தாளாளர் எஸ்.குமார், பள்ளி முதல்வர் ரூபியால் ராணி, துணை முதல்வர் சார்லஸ் கஸ்பார்ராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பிரபாகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, விக்னேஷ், எப்சி மேரி ஆகியோர் பாராட்டினர்.