புதுச்சேரி, நவ.14: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கே.ஸ்ரீவிசாகன் மற்றும் கே ஸ்ரீஹரிணி என்ற இரட்டையர்கள் கற்றனர். இவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உள்ளனர். 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து புதுச்சேரி கவர்னர், முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். இவர்களை சிறப்பிக்கும் விதமாக 10.11.2019 அன்று நாகப்பட்டினத்தில் நடந்த மக்கள் டிவியின் பட்டிமன்றத்தில் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் சாதனை குழந்தைகள் விருது வழங்கி கௌரவித்தார்.