கொழும்பு, நவ.15: இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா உட்பட 35 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தேர்தல் சாவடிக்கு எடுத்தவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர் இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மூன்று பேர் உட்பட 14 வெளிநாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கோத்தபய ராஜபக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சஜித் பிரேமதாசாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில’ரும் கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக மற்றொரு சாராரும் கூறியுள்ளனர்.