ஆழ்துளை கிணற்றில் சிறுவன் உயிருடன் மீட்பு

இந்தியா

நாசிக், நவ.15: மகாராஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். நாசிக் பகுதியில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் ஆறு வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.