லாஸ் ஏஞ்சல்ஸ், நவ.15: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலியானார்கள்.
அமெரிக்காவில் பள்ளி மாணவர் ஒருவர் தனது 16-வது பிறந்தநாளில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 16 வயது சிறுமியையும் 14 வயது சிறுவனையும் கொன்றதுடன், மேலும் மூன்று பேரை சுட்டு காயப்படுத்திவிட்டு, தன்னுடைய தலையில் சுட்டுக் கொண்டார்.

கருப்பு ஆடை அணிந்த வந்த அந்த சிறுவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டுப் பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.