சென்னை, நவ.16: மோர்பென் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் அரையாண்டுக்கான நிகர லாபம் 34 சதவீதம் உயர்ந்துள்ளது. மோர்பென் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் 30 செப்டம்பர் 2019-ல் முடிந்த அரையாண்டுக்கான தனியான நிகர விற்பனை வருவாய் 383.30 கோடி ரூபாய் ஆகும். கடந்த நிதி ஆண்டு இதே அரையாண்டில் இதன் நிகர விற்பனை 308.56 கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நடப்பு அரையாண்டில் இதன் நிகர விற்பனை 24.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

முதல் காலாண்டில் தனியான மொத்த வருவாய் 392.44 கோடி (ரூ.313.06 கோடி) ரூபாய் ஆகும். இது 25.4 சதவீதம் உயர்ந்துள்ளது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் நிதி தொகைக்கான முந்தைய வருவாய் தற்போதைய நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 31.8 சதவீதம் உயர்ந்து 37.44 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டு முதல் அரையாண்டில் 28.40 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இதே காலக்கட்டத்தில் ரொக்க வருமானம் 32.4 சதவீதம் உயர்ந்து 36.63 (ரூ.27.67 கோடி) கோடி ரூபாயாக உள்ளது.

2019-20-ம் நிதி ஆண்டுக்கான 2வது காலாண்டில் புதிய வரி விதிப்பு சட்டங்களின் (திருத்தம்) அவசர சட்டம், 2019க்கு இணங்க, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் உரிமைக்கான குறைந்தபட்ச மாற்று வரித் தொகை ரூ.5.15 கோடியை நிறுவனம் எடுத்தபோதிலும், அரையாண்டுக்கான நிகர லாபம் 34 சதவீதம் உயர்ந்துள்ளது.