வாஷிங்டன், நவ.16: அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ளதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ரேனு கத்தாரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகம் திரும்பியவுடன், முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.

சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்க்கு பண்பாட்டின் சிகரம், வீரத்தமிழ் மகன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் பேசிய ஓபிஎஸ் தன் மீது அன்பு கொண்டு விருதுகள் வழங்கும் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.