கர்நாடகம், நவ.16: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் ஜாக்கி விழுந்தால் பறிபோன பந்தயத்தால் ஆத்திரமடைந்த வர்கள் வளாகத்தில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கிசேதப்படுத்தினர். பெங்களூருவில் “2019- 20-ம் ஆண்டுக்கான குளிர்கால குதிரைப்பந்தயம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் பந்தயம் தொடங்கிய சில நிமிடத்தில் மழையின் காரணமாக சேதமடைந்திருந்த தடத்தில், குதிரைகள் வேகமாக ஓட முடியாமல் திணறியபடியே சென்றன.

12-ம் நம்பர் குதிரையின் ஜாக்கி குதிரையில் இருந்து கீழே விழ, அவரை தொடர்ந்து 10 நம்பர் குதிரையின் ஜாக்கியும் கீழே விழுந்ததால் முதல் பரிசு, கிடைக்கும் என்றும், 2 வது பரிசு நமக்கு தான் என்றும் ஆவலோடு காத்திருந்த சூதாட்டகாரர்களுக்கு பெருத்த ஏமாற்றமானது. இதையடுத்து மைதானத்தில் கலவரம் ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கு எறியப்பட்டன. புக்கிங் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.