புதுடெல்லி, நவ.16: ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுல் காந்திக்கு எதிராக மும்பையில் பிஜேபியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பிஜேபியினர் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.