புதுடெல்லி, நவ.18: உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சரத் அரவிந்த் போப்டே இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடந்த அக்டோபர் 18 அன்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான போப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு போப்டேயை உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அறிவித்தது.

ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சரத் அரவிந்த் போப்டே இன்று பதவியேற்றார், இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் சுமார் 18 மாதங்கள் அவர் பணியாற்றுவார் என தெரிகிறது.