ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சி அரிசிக்கடை உரிமையாளர் கைது

குற்றம் சென்னை

சென்னை, நவ.18: 6 லட்ச ரூபாய் கடனை அடைக்க வங்கி ஏ.டி.ஏம்ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அரிசி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் 10 வது பிளாக்கில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்ஐ நேற்று இரவு ஒருவர் உடைக்க முயன்றுள்ளார். அப்போது மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் அபாய மணி ஒலித்துள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள வங்கி அதிகாரிகள் இது குறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வாலிபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக ஏ.டி.எம்ஐ உடைத்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுத்தியல் மற்றும் கிரில் கட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சிலம்பரசன் (வயது 28) என்பதும் தருமபுரி அருகே உள்ள அரூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்வரனிக்ஸ் டிப்ளமோ படித்த அவர் கோவை மற்றும் திருப்பூரில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்துள்ளார். பின்னர் சென்னை நெற்குன்றத்தில் அரிசி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.6 லட்சம் வரை கடனாகிவிட்டதாகவும், கடனை திருப்பி செலுத்த ஏ.டி.எம்ஐ உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதாகவும் அவர் கூறியதாக தொரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.