ரோபோட்டிக்கில் சாதனை படைக்கும் வேலம்மாள் பள்ளி

சென்னை

சென்னை, நவ.19: முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டி.பிரசன்னா, எஸ்.ரிஷிகேஷன், எம்.ஹரிஹரன், டி.பிரஜன் ஆகியோர் சென்னையை சேர்ந்த பிராக் ரோபோட்டிக் நிறுவனம் சமீபத்தில் நடத்திய பள்ளிகளுக்கிடையேயான சூப்பர் லீக் ரோபோட்டிக் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப் பரிசினை வென்றனர். முன்னதாக இப்போட்டி பி.எஸ். அப்துர் ரஹமான் க்ரெசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது.