வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது 100 இரட்டையர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

சென்னை

சென்னை, நவ19: 100 இரட்டையர் ஜோடிகளுடன் இணைந்து ஒரு நாள் தொலை பேசியில்லாத நிகழ்ச்சியை முகப்பேர் வேலம்மாள் பள்ளி நடத்தியது. தகவல்தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டுள்ள 100 ஜோடி இரட்டையர்களுடன் இணைந்து கைப்பேசியில்லாத ஓர்நாளை கடந்த 16ம்தேதி வெற்றிகரமாக கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வுக்குழு இயக்குனர்கள் அருண் மற்றும் அரவிந்த் ஆகியோருர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓவேஷன் கிட்ஸ் மேளவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் 100 ஜோடி இரட்டையர்களின் நடனகாட்சி அனைவரையும் கவர்ந்தது.