இஸ்லாமாபாத், நவ.20: பாகிஸ்தானில் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் ஆன நகைகளை மணப்பெண் ஒருவர் அணிந்திருக்கும் படங்கள் ஆன்லைனில் வைரலாகி உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தடை விதித்ததைத் தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி விலை 300 ரூபாயை தாண்டியது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்த நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக உடல் முழுவதும் தக்காளி நகைகளை அணிந்திருக்கிறார். இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.