ராமதாசிடம் முதல்வர் நலம் விசாரித்தார்

சென்னை

சென்னை,நவ.20: உடல் நலக்குறைவு காரண மாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். காய்ச்சல் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் ராமதாஸ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 1 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோடு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.