சென்னை, நவ.20: ஆவடி ராம் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 47). அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மணலியில் உள்ள நண்பரை பார்க்க தனது பைக்கில் சென்றுள்ளார். மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, இவரது பைக் மீது கனரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில், கீழே விழுந்த பாபு மீது அந்த வாகனம் ஏறி சென்றதில், தலை நசுங்கிய நிலையில், பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.