ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

அம்பத்தூர், நவ.20: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட மிட்டனமல்லி மற்றும் சோழம்பேடு பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ் ஆட்சி மொழி கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று சிறப்பித்தார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், மாவட்ட கோட்டாட்சியர் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் ஆட்சி மொழி கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார நிலைய மைய கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். மேலும் நடை பயிற்சி பாதை, குழந்தை களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பூங்கா, பசுமை தோட் டங்கள் போன்றவைகளையும் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.