சென்னை, நவ.20: திருவள்ளூரை சேர்ந்தவர் மேரி ஸ்டெல்லா (வயது 54). இவரது மகள் பிரீத்திக்கு திருமணமாகி சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் கணவருடன் வசித்துவருகிறார். இந்த நிலையில், மகள் பிரீத்தி வீட்டிற்கு மேரி ஸ்டெல்லா நேற்று பேருந்தில் சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோதுதான், தன்னுடன் எடுத்துவந்த நகைப்பை மாயமானது மேரிக்கு தெரியவந்துள்ளது. அதில், 19 சவரன் நகை இருந்துள்ளது. இது குறித்து மேரி அளித்த புகாரின்பேரில், சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.