ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, படத்தலைப்பைப் போலவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் என்பதால் நூறு நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் திருக்கடல் உதயம், விஷுவல் விருந்தாகவே உருவாக்கியிருக்கிறார். ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக பானு நடிக்க, ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்திருக்கின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.