கல்கி ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரி சோதனை

இந்தியா

சித்தூர், நவ.21: ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தூர் மாவட்டம், வரதய்ய பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் கடந்த மாதம் ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு 94 கோடி ரூபாய் ரொக்கம், 24 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பணம் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் வருமான வரித்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து கல்கி ஆசிரமத்தில் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.