கொழும்பு, நவ.21: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு அவரது தம்பியும், ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபக்சே இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாட்களுக்கு முன் அதிபராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கை நேற்று ராஜினாமா செய்தார். தனது அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணன் ராஜபக்சேவுக்கு தம்பி கோத்தபய பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருக்கு எம்பிகள் வாழ்த்து தெரிவித்தனர்.