சென்னை, நவ.21: தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் குமார் (வயது 35), ராமகோபாலகிருஷ்ணன் (வயது 45). இவர்கள், மயிலாப்பூரில் தங்கி டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ராமகோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த ராமகோபாலகிருஷ்ணன், குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமகோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.