சென்னை, நவ.21: லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில், செல்போன் கடை ஊழியர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மயிலாப்பூரில் பிரபல செல்போன் கடை அமைந்துள்ளது. இங்கு, லோன் மூலம் செல்போன், லேப்டாப், பைக் ஆகியவை வாங்கி தருவதற்காக 8 பேரை கடை நிர்வாகம் நியமித்துள்ளது. நிதி நிறுவனத்தில் இருந்து கிடைக்கப்பெறும் லோன் தொகையை இவர்கள் பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் லோன் கிடைக்கவில்லை என்று கூறி, ரூ.17 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தெரியவந்ததும், கடை மேனேஜர் மெர்வின் ஜோசப், மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், மோசடியில் தொடர்புடைய 8 பேரில் பாலவாக்கத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.