விழுப்புரம், நவ.21: விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஆளவந்தான் மகன் விஜய் (வயது 35). இவர் வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். கெங்க ராம்பாளையம் சோதனைச்சாவடியை கடந்து வந்தபோது 2 வாலிபர்களில் ஒருவர் திடீரென தனது காலால் விஜயை எட்டி உதைத்துள்ளார். இதில் அவர் கீழே விழுந்தவுடன் இருவரும் விஜயை கத்தியால் கையில் வெட்டி அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பணப்பையில் ரூ.2.40 ஆயிரம் இருந்தது.