ஸ்ரீ கிரிஷ் பள்ளி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை

சென்னை, நவ.21: சென்னையில் உள்ள ஸ்ரீ கிரிஷ் இன்டர்நேஷனல் பள்ளியும், ராயல் காமன் வெல்த் சொசைட்டியும், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பள்ளியின் தலைவர் டாக்டர். ஆர்.கிருஷ்ணமூர்த்தி கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியின் போது மலேசியாவில் உள்ள சிலங்கார் மாகாணத்தின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதின் பின் ஆத்மன் முன்னிலை வகித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் படி பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மலேசியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இதரப்பள்ளிகளை விட இந்த பள்ளி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வந்தது பாராட்டத்தக்கது என்று மலேசிய அமைச்சர் கூறினார்.