சென்னை, நவ.21: மாஞ்சா நூல் விற்றவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சென்னை பெருநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் விற்ற வழக்கில் கைதான பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஞானசேகரன் (வயது 53), பெசன்ட் நகரை சேர்ந்த சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய தரணி (வயது 29), வியாசர்பாடியை சேர்ந்த கொலை வழக்கில் தொடர்புடையை குமார் (வயது 30), ஓட்டேரியை சேர்ந்த கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அஜிதுல்லா (வயது 24) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.