புதுடெல்லி, நவ,22: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் நச்சுத்தன்மை இருப்பதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார். மக்களவையில் இன்று திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசிய போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த பாலில் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை கலந்திருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தும் பால் தூய்மையாக இருப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.

இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறிய போது தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் அபிலோ டோக்சி எம்1 என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாலின் தரம் குறித்து ஆய்வு நடத்தியதில் தமிழகத்தில் தரம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. பாலில் தரம் குறைவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.