காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி, வழக்கறிஞர்கள் பங்கேற்று சட்ட ஆலோசனைகளை வழங்கினார். குழந்தைகள் மீதான தீங்கிழைத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம் காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த இம்முகாமிற்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்புறை ஆற்றினார். முதன்மை சார்பு நீதிபதி (வட்ட சட்ட பணிகள் குழு) எஸ்.பிரியா, கூடுதல் சார்பு நீதிபதி கே.சுதா ராணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, மூத்த வழக்கறிஞர் ஜான், வழக்கறிஞர் வடிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த குமார் நன்றியுரையாற்றினார். இம்முகாமின்போது, மாணவிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.