சென்னை, நவ.22: கானாத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.