முத்தையா முரளிதரனுக்கு இலங்கையில் பதவி கவர்னர் ஆகிறார் கிரிக்கெட் வீரர்

உலகம்

கொழும்பு, நவ.22: இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு மாகாண கவர்னராக இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நியமிக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இலங்கையில் கண்டியை சேர்ந்த தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீரராக இருந்தவர். 2005 முதல் 2015 வரை கோத்தபய ராஜபச்சே ராணுவ அமைச்சராக இருந்த போது அவருக்கு முத்தையா முரளிதரன் ஆதரவு தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும், அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இதையடுத்து தமிழர் மாகாணமான வடக்கு பகுதிக்கு முத்தையா முரளிதரனை கவர்னராக நியமிக்க கோத்தபய ராஜபச்சே முடிவு செய்துள்ளதாக கொழும்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்ற போதிலும், முத்தையா முரளிதரனுக்கு பதவி கிடைப்பது உறுதி என தெரிகிறது. கோத்தபய ராஜபச்சே திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கோத்தபய ராஜபச்சேயின் அண்ணன் மகிந்த ராஜபச்சே நேற்று பிரதமராக பதவியேற்றார்.