செங்குன்றம், நவ.22: மாதவரம் எம்எம்டிஏ பிரதான சாலை பகுதியில் வசிப்பவர் கோட்டீஸ்வரன் .இவரதுமனைவி கோமதி (வயது 28) தனியார் வங்கி கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடீந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமிகள் கோமதியிடம் விலாசம் கேட்பதுபோல் பேசி அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு ஓடி விட்டார்களாம்.

இதில் தடுமாறி கீழே விழுந்த கோமதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். இது குறித்து அவர் கொடுத்த புகார் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.