உண்மைச் சம்பவங்களால் உருவான ‘தண்டுபாளையம்’

சினிமா

வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘தண்டுபாளையம்’ இதில் சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, டி.எஸ்.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஆர்.கிரி ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி வசனம் எழுதுகிறார். ஆனந்த் ராஜா விக்ரம் இசையமைக்க, ஆனந்த் குமார் கலையமைக்கிறார். கே.டி. நாயக் இயக்குகிறார். ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி டிசம்பர் மாதம் படத்தை வெளியிடுகிறார்.