வாரணமாயிரம் படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்னைஅறிந்தால், சிங்கம்-3, பாகுபலி ஆகிய படங்களுக்கு ஆரியாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகா படத்தில் நடித்தார். இதில் குண்டு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதைற்காக தனது உடல் எடையை 20 கிலோ அளவிற்கு கூட்டினார். அதன்பிறகு மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார். இருப்பினும், பெரிய பலன் கிடைக்கவில்லை, அதோடு பாகுபலி-2 படத்தில் நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த போதிலும் தனது உடல் எடையினால் நடிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், உடல் எடையை குறைந்து மீண்டும் பழைய அனுஷ்காவாக மாறி உள்ளதால் சூர்யா படத்திற்கு நடிக்க ஒப்புக்கொள்ள உள்ளார்.