சென்னை, நவ.23: மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சென்னையில் வாழும் 90 சதவீத மக்கள் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை அறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வுக்கும் அதை அன்றாட பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கும் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு அதிகமாக இருப்பது, மகிந்திரா நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகள் வாங்கக் கூடிய நிலையிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள அதே பொருளின் தன்மையுடனும் தரத்துடனும் இல்லாததுதான் இந்த வேறுபாட்டுக்கு முக்கியக் காரணம் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மகிந்திரா குழுமத்தின் முதலாவது “மாற்று முறை” ஆய்வில் சென்னையை அடிப்படையாகக் கொண்ட 90 சதவீத மக்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று பதில் அளித்தனர். இந்த கவலைகளை எல்லாம் தீர்க்கும் வகையில் நடைமுறை வாழ்வில் மாற்றங்களை பார்க்கும் போது அதை சென்னையில் 26 சதவீதம் பேர் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றத்தைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளனர். தேசிய அளவில் இதன் சராசரி 13 சதவீதமாக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மிகப் பெரும்பான்மையான 74 சதவீதம் பேர், போக்குவரத்தில் சவுகரியம், வசதி, நேரம், செலவு ஆகியவற்றை முக்கியமாகக் கருதுவதாக கூறியுள்ளனர். தேசிய அளவில் 87 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். அந்த தகவலை மகிந்திரா குழுமத்தின் நீடித்த வளர்ச்சிப் பிரிவு தலைமை அதிகாரி அனிர்பன் கோஷ் தெரிவித்தார்.