மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியிருந்தனர், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நீடிப்பது நல்லதல்ல. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவுக்கு ஒரு நிலையான அரசாங்கம் தேவை, இதுவொரு ‘கிச்சடி’ கூட்டடணி அரசாங்கம் அல்ல என கூறினார்.

விவசாயிகளின் பிரச்னை  தீர்க்கவே கூட்டணி: அஜித் பவார்
துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில், மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை உள்பட பல பிரச்னைகள் எதிர்கொண்டுள்ளது. ஆகவே நாங்கள் நிலையான அரசை அமைக்க முடிவு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகள் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.