கொழும்பு, நவ.23: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே கடந்த 18-ந் தேதி அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார். 2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால மந்திரிசபையையும் நியமித்தார். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கோத்தபய ராஜபக்சே புதிய அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஈழத்தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிய ராணுவம் மற்றும் ஏந்திய ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.