சென்னையில் 18கிலோ கஞ்சா பறிமுதல் சிறுவன் உட்பட 9பேரை கைது செய்து விசாரணை

குற்றம் சென்னை

சென்னை, நவ.23: சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 18கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறுவன் உட்பட 9பேரை கைது செய்துள்ளனர். சென்னை மியூசியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எழும்பூர் போலீசாருக்கு வந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று தீவிரசோதனை நடத்தினர்.அப்போது மியூசியம் அருகே கஞ்சா விற்பனை செய்த மஸ்தான் (வயது62) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒருகிலோ 300கிராம் கஞ்சா மற்றும் ரூ. 1200 பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, கிண்டி ஒலிம்பியா பகுதியில் பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் படி கிண்டி போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்த மேற்கு மாம்பலத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது20) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100கிராம் கஞ்சா மற்றும் ரூ. 15ஆயிரம் பணம் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், அசோக்நகர் புதூர் பகுதியில் கோகுல் (வயது20) என்பவர் கஞ்சா புகைத்து கொண்டிருந்ததை பார்த்து போலீசார் அவரைகைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரிடம் காஞ்சா வாங்கியதாக அவன் கூறியதை தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தியபோது லட்சுமி வீட்டிலிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் வருவதை பார்த்து தப்பி ஓடிய லட்சுமியை தேடி வருகின்றனர்.சென்னை சென்ட்ரலில் இன்று காலை 9மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் சென்னை வந்தது.அப்போது அப்போது ரெயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் நடைமேடையில் சோதனை செய்து கொண்டிருந்தபோது ஒரு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பையில் 10கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது தேனியை சேர்ந்தவன் என்பதும் விசாகப்பட்டினத்தில் வாங்கி ரெயில் கடத்தி வந்து தேனியில் விற்பனை செய்வது என்பதுதெரியவந்தது. சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோன்று திருவேற்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒருகும்பல் கஞ்சா விற்றுக்கொண்டிருந்ததை கண்டு மடிக்கி பிடித்தனர்.அப்போது அவர்களிமிருந்து 4கிலோ கஞ்சா, 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீகாந்த், ரஞ்சித்,கிங்டன், சுரேஷ் உட்பட 5பேரை கைது செய்துள்ளனர்.