ஹால் மெக்வாயுடன் விஜிபி ரவிதாஸ் சந்திப்பு அமெரிக்காவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பு

சென்னை

சென்னை, நவ.23: அமெரிக்காவில் பன்னாட்டு பொழுதுபோக்கு பூங்காக்களின் கூட்டமைப்பு தலைவர் ஹால் மெக்வாயை விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ் சந்தித்து பேசினார். அமெரிக்கா நாட்டு ஆர்லென்டோ நகரில் பன்னாட்டு பொழுதுபோக்கு பூங்காக்கள் கூட்டமைப்பின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அதன் வருடாந்தர வர்த்தக கண்காட்சி கடந்த 19.11.2019 முதல் 21.11.2019 வரை நடைபெற்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில இந்திய பொழுதுபோக்கு பூங்காக்கள் கூட்டமைப்பின் சார்பில் விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ் கலந்துகொண்டு பன்னாட்டு பொழுதுபோக்கு கூட்டமைப்பின் தலைவர் ஹால் மெக்வாய் கவுரவிக்கப்பட்டார்.
விஜிபி ரவிதாஸ் கடந்த 3 ஆண்டுகளாக இக்கூட்டமைப்பின் வர்த்தக கண்காட்சி நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஜிபி ரவிதாஸ் குறிப்பிடுகையில் வி.ஜி.பன்னீர்தாஸ் மற்றும் அவர் சகோதரர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரால் 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட விஜிபி நிறுவனம் சுலபத் தவணையில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை, வீட்டு மனை விற்பனை, பீச் ரிசார்ட் மற்றும் கேளிக்கை பூங்கா தொழில் ஆகியவற்றில் முன்னணியில் விளங்குகிறது.

அண்மையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விஜிபி மரைன் கிங்டம் என்ற இந்தியாவில் முதன் முதலாக பன்னாட்டு தரத்தில் கண்ணாடி குகை மீன் காட்சியகம் அமைத்துள்ளோம். இது மக்களிடையே, குறிப்பாக பள்ளி மாணவ மாணவியரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் எங்கள் பொழுது போக்கு சாதன உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் டிசைனர்களுடன் கலந்து பேசி புதிய பொழுது போக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கூறினார்.