தரமான படங்களை மட்டும் தயாரிப்போம்: ஐசரி கணேஷ்

சென்னை

சென்னை, நவ.25: வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்போம் என்று ஐசரி கணேஷ் கூறினார்.வெற்றி விழா நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ் பேசியதாவது:- எனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு 92-ம் ஆண்டு 25 மாணவர்களுடன் கல்லூரியை தொடங்கினேன். கடும் உழைப்பால் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்லூரி நிறுவனங்களை நிறுவினேன். என் தந்தை ஐசரி வேலன் திரையுலகில் இருந்து மறைந்தார். அந்த துறையில் நானும் பங்கேற்க வேண்டும் என்ன எண்ணம் இருந்தது. அதன் வெளிப்பாடுதான் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற பட தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நோக்கமே குறைந்த செலவில் திரைப்படங்களை தயாரித்து மக்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சங்களை தரவேண்டும் என்பதுதான். இனி வரும் காலங்களிலும் எங்களது திரைப்படம் வழியாக தரமான திரைப்படங்கள் வெளிவரும் என்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.