சென்னை, நவ.25: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை மலேசிய டி.எம்.ஒய். கிரியேஷனின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப், நேரில் சந்தித்து பேசினார். டி.எம்.ஒய். கிரியேஷன் மலேசியா மற்றும் எஃப்.எம்.எஸ். -ல் ‘காலா’, ‘2.0’ உள்ளிட்ட 167 படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளியீட்டிருக்கிறார்கள். இன்னமும் பல பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளார்கள். இந்த நிலையில் சென்னை வந்த டி.எம்.ஒய். கிரியேஷனின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப், மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார்.அப்போது ரஜினி காந்த் படங்களுக் மலேசிய நாட்டில் உள்ள வரவேற்பு குறித்து அவரிடம் எடுத்துரைத்தார். அடுத்து வெளியாக உள்ள ரஜினி படங்களையும் தானே வாங்கி வெளியிட உள்ளதாகவும் ரஜினியிடம் தெரிவித்தார்.