‘மாமி சமையல்’ சிறப்பு உணவு திருவிழா நவ.22 முதல் டிச.1 வரை நடக்கிறது

சென்னை

சென்னை, நவ.25: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நவ. 22 முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை கும்பகோணம் பிரேமா மாமியின் கைவண்ணத்தில் ‘மாமி சமையல்’ உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தை சேர்ந்த பிரேமா மாமியின் சைவ உணவு வகைகள் பிரசித்தி பெற்றவை. அவரது குழுவின் தயாரிப்புகளை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் மாமி சமையல் உணவு திருவிழா என்ற பெயரில் நவம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள நீண்ட கடற்கரை பகுதிகளிலும் மலைவாசஸ்தலங்களிலும் பிரேமா மாமியின் சைவ உணவு விழா வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம், கோலம் ஆகிய கலாச்சாரத்தில் சிறந்த தமிழ்நாட்டில் சைவ உணவு களையும் ஒன்றாக உள்ளது. இந்த உணவுத்திருவிழாவில் ஜீரக பானகம், நீர்மோர், உசிலி, மோர்களி, மோர் குழம்பு, மோர் கூட்டு, பச்சடி, துவையல், அரைத்துவிட்ட சாம்பார், கறிவேப்பிலை குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, தேங்காய¢சாதம், புளியோதரை, மாலட்டு, போளி ஆகிய சைவ உணவுகள் இந்த விழாவின் போது பரிமாறப்படுகின்றன.

திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் பகல் 12.30 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை மதிய உணவுகள் பரிமாறப்படும். இதற்கான கட்டணம் தலா ஒருவருக்கு ரூ. 400 ஆகும். இதே போன்று இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை தலா ஒருவருக்கு ரூ.555 ஆகும். இதுகுறித்து மேலும் தகவல் அறிய 98409 78842, 98849 51022, 044-6677 3333 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.