‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை கண்காட்சி எழும்பூர் கோ-ஆப்டெக்சில் நடக்கிறது

சென்னை

சென்னை, நவ.25: ‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை கண்காட்சி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி மைதானத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் இருந்து 90-க்கும் மேற்பட்ட கைவினைக் குழுக்கள், சிறிய வணிகர் சங்கங்கள் பங்குபெற்றுள்ளன. டாஸ்ட்கர் எப்போதும் சந்தையில் புதிய கைவினை குழுக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எனவே இம்முறை ஏராளமான புதிய கைவினை குழுக்கள் மற்றும் டிசைனர்கள் தங்கள் பிரத்தியேக படைப்புகளைச் சென்னை நேச்சர் பஸாரில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.

கந்தா எம்ப்ராய்டரி,ஃபைபர் மற்றும் மரத்தால் ஆன கைவினைப்பொருட்கள், கைத்தறி பருத்தி ஆடைகள், லெதர் மற்றும்சணல் வேலைப்பாடுகள், சில்க் மற்றும் துசார் கைத்தறி நெசவுத் துணிகள், மர சாமான்கள்,வெள்ளி நகைகள், மாணிக்கக் கல் பதித்த நகைகள், வேலைப்பாட்டுடன் மண்பாண்டங்கள், மறுசுழற்சிசெய்யப்பட்ட துணி வகைகள், தோல் பாதணிகள், நீல மட்பாண்டங்கள், பேடிக் பிரிண்டிங், டெர்ராக்கோட்டா, லெதர் மற்றும் சணல்வேலைப்பாடுகள், சில்க் மற்றும் துசார் கைத்தறி நெசவுத் துணிகள் என ரகரகமான கண் கவர் பொருள்கள் இங்கே ‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை-இல் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தப் பஜாரில், பல்வேறு விதமான அணிகலன்கள், வெள்ளி நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், உலோக கைவினைப் பொருட்கள், அலங்கார பொருட்கள், மண்பாண்டம் மற்றும் பீங்கான் சாமான்கள், கைகளால் பின்னப்பட்ட கூடைகள், ஃபைபர் கைவினை பொருட்கள், லெதர் பொருட்கள், பாரம்பரிய ஓவியங்கள், என நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு ஆச்சர்யமூட்டும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் நான்கு திசைகளில் இருந்தும் ஆச்சர்யமூட்டும் கைவினை பொருள்களை இங்கெ வாங்க முடியும்.