ஆடிட்டர் குருமூர்த்திக்கு செல்லூர் ராஜூ பதில் ‘2021-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் அதிசயம்’

சென்னை

சென்னை, நவ.25: அதிமுகவுக்கும், ஆடிட்டர் குரு மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வெங்காயத்தை தமிழகத்தில் பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கூறியதாவது: வெங்காய விலை ஏற்றம் விவகாரத்தில் தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால்தூங்குவது போல நடிப்பவர்களை என்னசெய்வது. அரசின் பசுமை பண்ணை கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40 க்கு விற்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் மழை காலமாக இருப்பதால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வெங்காய விலை ஏறியுள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில் கிலோ ரூ.250 விற்கப்பட்டது. தமிழகத்தில் வெங்காயம் பதுக்கல் கிடையாது அப்படி பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கிலோ வெங்காயம் ரூ.70 முதல் 80விற்கப்படுகிறது ஜனவரியில் 10 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படும் .விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசினார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து நாங்கள் மரியாதையாக பேசுகிறோம்.

ஆனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசி வருகிறார். அதிமுகவை யாரும் வழிநடத்தவில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் அதிமுகவை வழி நடத்துகிறார்கள்.
அதிமுகவிற்கும், குரு மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுக 3வது முறையாக ஆட்சியமைக்கும் அதிசயம் 2021ம் ஆண்டில் தமிழகத்தில் நடக்கும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்