சென்னை, நவ.25:  பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின் (பிபிஎல்) 5-வது சீசனில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான 29 வயதான சாய்னா நேவால், பி.பி.எல். தொடரில் வட கிழக்கு வாரியர்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ஜனவரி 20-ம் தேதி தொடங்கும் பிபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.