மும்பை, நவ.25:  இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் வந்தது நிம்மதி அளிக்கிறது. பகல்-இரவு டெஸ்ட் முதல்முறையாக நடத்தியதால், இந்த டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்த நாங்கள் நிறைய பணிகளை செய்தோம். எதிர்பார்த்தபடியே ரசிகர்கள் அதிகளவில் வந்தனர். டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன.

போட்டி நல்லமுறையில் முடிந்ததால், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளேன். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காலத்திற்கேற்ப மாறுவது கட்டாயம் என கங்குலி தெரிவித்துள்ளார்.