சென்னை, நவ.25: சென்னை விமான நிலையத்தில் 1200பேர் பங்கேற்ற மாபெரும் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பன்னாட்டு விமான நிலையம் வெளிச்சுவரிலிருந்து விமான நிலைய அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள சுவர்களில் 800 படங்கள் வரையபட்டன. இதில் 1200 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ஓவியர் ஓவியம் வரைந்தனர்.அவர்கள் மழையில் பாதிக்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற ஓவியர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விமான நிலையம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது.