200 குழந்தை மற்றும் நோயாளிகளுக்கு புத்தாடை காஞ்சி மருத்துவமனையில் வழங்கப்பட்டது

தமிழ்நாடு

காஞ்சிபுரம், நவ.25: காஞ்சிபுரம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 94 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 200 குழந்தைளுக்கு புத்தாடை மற்றும் தொழுநோயாளிகளுக்கு வேலட்டி சேலை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 94 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் காசநோயாளிகள் “தொழுநோயளிகள் ஆகியோருக்கு வேட்டி சேலை ஊட்டுச்த்து மற்றும் இலவச மருத்துவம முகாம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் அன்னையர் இல்லம் முதியோர் இல்லத்தில் 20 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தை மருத்துவர் மரு.முரளிகிருஷ்ணன் பங்கேற்றார். அன்று மாலை ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்று பாலவிகஸ் குழந்தைகளின் கலைநிகழ்ச்சியும் ப குழந்தைகளுக்கு புத்தாடையும், பிரசாதமும் வழங்கப்பட்டது, நிலைய மருத்துவர் பாஸ்கரன் உடனிருந்தார்.