துருவை நினைத்து பெருமையாக உள்ளது: விக்ரம்

சினிமா

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ஆதித்யவர்மா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப்பெற்றது. படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் துருவ் விக்ரம், தனுஷ், அன்புதாசன், இசை அமைப்பாளர் ரதன், இயக்குநர் கிரிசாயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் நடிகர் விக்ரம் பேசியதாவது, இது மிகவும் அருமையான தருணம். துருவிற்கு முதல் படம். அவனுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ். இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட சோல் எல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.