சென்னை,நவ 26: சென்னை அருகே வீட்டில் திறந்து வைத்திருந்த நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த 4வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- பள்ளிக்கரணை மல்லிகேஸ்வரன் நகரில் வசித்து வரும் பாரதிராஜா.இவரது மகன் கிருத்திக் ராஜ்.(வயது 4) இவர் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போழுது, அங்கு தரையோடு திறந்த நிலையில் இருந்த நீர்த்தேக்க தொட்டியினுள் கிருத்திக் ராஜ் தவறி விழுந்துள்ளான்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது குழந்தை தொட்டிக்குள் விழுந்தது தெரியவந்தது.உடனடியாக கிருத்திக் ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.ஆனால்அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.